Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து எஃஏ கிண்ணம்; செல்சி அதிரடி வெற்றி

11/01/2026 05:44 PM

லண்டன், 11 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்து FA கிண்ண காற்பந்து போட்டி

இன்று காலை நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செல்சி 5-1 என்ற கோல்களில் அதிரடியாக சார்ல்ட்டோன் அணியைத் தோற்கடித்தது.

புதிய நிர்வாகி லியாம் ரொசெனியொர் தலைமையில் செயல்படத் தொடங்கி இருக்கும் செல்சிக்கு இந்த வெற்றி புதிய உத்வேகத்தை அளித்திருக்கின்றது.

செல்சி - சார்ல்ட்டோன் இடையிலான முதல் பாதி ஆட்டம் கடுமையாக இருந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் இறுதி 45-வது இடத்தில் தனது முதல் கோலை ஜொரெல் ஹடோ வழி அடித்து 1-0 என்ற நிலையில் முதல் பாதியை செல்சி நிறைவு செய்தது.

செல்சியின் இதர நான்கு கோல்கள், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 50,62,90 மற்றும் 94-வது நிமிடங்களில் போடப்பட்டது.

கடந்த வாரம் செல்சியை விட்டு முன்னாள் நிர்வாகி என்சோ மரெஸ்கா  வெளியேறியதை அடுத்து, 41 வயது ரொசெனியொர் அக்கிளப்பிற்கு நிர்வாகியாக பொறுப்பேற்றார்.

அவரது வருகையும் முதல் ஆட்டத்தை எதிர்கொண்ட விதமும் செல்சிக்கு ஏறுமுகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)