கோலாலம்பூர், ஜனவரி 12 (பெர்னாமா) -- இந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் 150-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே கொண்டிருக்கும் 252 பள்ளிகள் எஸ்.கே.எம் எனப்படும் குறைவான மாணவர்களை கொண்டப் பள்ளிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், கோல கங்சார் மாவட்ட கல்வி அலுவலகம் அதிகபட்சமாக 33 எஸ்.கே.எம் பள்ளிகளையும் பகான் டதொக் மாவட்ட கல்வி அலுவலகம் 32 எஸ்.கே.எம் பள்ளிகளையும் மற்றும் பதாங் பாடாங் மாவட்ட கல்வி அலுவலகம் 30 எஸ்.கே.எம் பள்ளிகளையும் கொண்டுள்ளன என்று பேராக் மாநில கல்வி இயக்குநர் சுல்காஃப்லி முஹமாட் மொக்தார் தெரிவித்தார்.
91 தேசிய வகை தமிழ் பள்ளிகள் 150-க்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் வேளையில் 79 தேசியப் பள்ளிகளிலும் அதே சூழல் நிலவுவதாக சுல்காஃப்லி முஹமாட் மொக்தார் குறிப்பிட்டார்.
''ஏழு மாணவர்களுடன் இயங்கும் பள்ளிகள் உள்ளன. ஐந்து மாணவர்களை மட்டுமே கொண்ட பள்ளிகளும் உள்ளன. மாணவர்கள் பற்றாக்குறைக்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வரலாறு மற்றும் புவியியல் காரணங்கள் அடிப்படையில் இருக்கலாம். சில நேரங்களில் தங்கள் குழந்தைகள் ஏற்கனவே இடைநிலைப் பள்ளிக்குச் சென்றுவிட்டதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆகவ்ர்ர் ஆரம்பப் பள்ளியில் குறைவாக உள்ளனர். மேலும் பிற பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்களும் உள்ளனர்.'' என்றார் சுல்காஃப்லி முஹமாட் மொக்தார்.
பள்ளித் தவணையின் முதல் நாளை முன்னிட்டு, ஈப்போ, ராஜா பெரெம்புவான் தேசிய பள்ளிக்கு வருகை தந்த பின்னர் சுல்காஃப்லி முஹமாட் மொக்தார் செய்தியாளர்களிடம் அந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)