Ad Banner
 பொது

கோலா லங்ஙாகிட்டில் உள்ள பன்றிப் பண்ணை உடனடியாக மாற்றப்படும்

13/01/2026 04:13 PM

ஷா ஆலம், 13 ஜனவரி (பெர்னாமா) -- மீண்டும் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க கழிவுநீர் அமைப்பு, இட வசதி மற்றும் இதர காரணங்களைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் கோலா லங்ஙாட்-இல் உள்ள பன்றிப் பண்ணை, பொருத்தமான இடத்திற்கு உடனடியாக மாற்றப்படும்.

இந்த இடம் மாற்றம் செயல்முறையில் உரிமம் பெற்ற 69 தொழில் நடத்துனர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி  தெரிவித்தார்.

''எனவே, ஆரம்பத்திலிருந்தே துர்நாற்றம், நீர் மாசுபாட்டை ஏற்படுத்திய தனியார் துறையால் மேற்கொள்ளப்படும் அந்த பாரம்பரிய வளர்ப்பு முறையை நாங்கள் மூட நினைத்தோம். குறிப்பாக மாநில அரசாங்கத்திடமிருந்து இதற்கு எந்த நிதியும் நிலமும் வழங்கப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நிலம் இருந்தால், அது சம்பந்தப்பட்ட தரப்பினரால் வாங்கப்பட்ட நிலமாகும்,'' என டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று, சிலாங்கூர் ஷா ஆலமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசினார்.

கால்நடை சேவை துறையின் முதற்கட்ட தரவுகளின்படி, அந்த பன்றி வளர்ப்பு பண்ணையில் ஒரு லட்சத்து 20,000 பன்றிகள் இருப்பதாகவும், அவை உள்நாட்டு தேவைகளில் 30 விழுக்காடு மட்டுமே பூர்த்தி செய்வதாகவும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)