Ad Banner
 பொது

சமையல் எண்ணெய்க்கான அதிகாரப்பூர்வ குறிப்பு விலையை எம்.பி.ஒ.பி அறிமுகப்படுத்தும்

13/01/2026 04:24 PM

ஜாலான் இம்பி, 13 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டின் முதல் காலாண்டில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், யு.சி.ஒ-கான அதிகாரப்பூர்வ குறிப்பு விலையை, மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம், எம்.பி.ஒ.பி அறிமுகப்படுத்தும்.

இந்த அளவுகோல், தெளிவான விலை வழிகாட்டியை வழங்குவதோடு, நியாயமான வர்த்தகத்தை ஆதரித்து, விலை கையாடல் மற்றும் மோசடியிலிருந்து சிறு வர்த்தகர்களை பாதுகாக்கும்.

அதுமட்டுமின்றி, மிகவும் சீரான மற்றும் நிலையான யு.சி.ஒ சந்தைக்கு ஒரு முக்கிய படியாகவும் இருக்கும் என்று தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சர், டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் தெரிவித்தார்.

சமையல் எண்ணெய் அல்லது யு.சி.ஒ பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உயிரியல் எரிபொருள் அல்லது எண்ணெய் வேதிப்பொருட்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படலாம். சுற்றுச்சூழல் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் புதிய மூலப்பொருட்களையும் சார்ந்துள்ளது. எம்.பி.ஒ.பி சிறந்த அரசாங்க நெகிழ்வுத்தன்மை மற்றும் சந்தை மேற்பார்வை மூலம் இதை ஆதரிக்கும் என்று நம்புகிறேன். யு.சி.ஒ சந்தையில் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யப்படும்,'' என டத்தோ ஶ்ரீ டாக்டர் நோராய்னி அஹ்மாட் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் 2026-ஆம் ஆண்டு செம்பனை எண்ணெய் தொடர்பான பொருளாதார கண்ணோட்டம் மற்றும் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை தொடக்கி வைத்து உரையாற்றும்போது அவர் அவ்வாறு கூறினார்.

கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றுவதில், குறிப்பாக உயிரியல் எரிபொருள்கள் மற்றும் யு.சி.ஒ போன்ற கீழ்நிலை பயன்பாடுகளுக்கு மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)