Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இங்கிலாந்து பூப்பந்து போட்டி; முதல் சுற்றில் ஜூன் ஹோ வெற்றி

04/03/2026 07:19 PM

இங்கிலாந்து, மார்ச் 04 - 2026 ALL ENGLAND பூப்பந்து போட்டி தொடங்கி இருக்கும் நிலையில் நாட்டின் தேசிய ஒற்றயர் ஆட்டக்காரரான லியோங் ஜூன் ஹோ முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிப் பெற்றார். 

ஜப்பானின் கென்டோ நிஷிமோதோவை அவர் கடும் சவாலுக்குப் பின்னர் தோற்கடித்தார். 

முதல் செட் ஆட்டத்தில் 21-17 என்று வெற்றிப் பெற்ற லியோங் ஜூன் ஹோ, இரண்டாம் செட்டில் 13-21 என்ற நிலையில் தோல்வி கண்டார்.  

வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் செட் ஆட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 26 வயதுடைய அவர் 21-18 என்ற புள்ளிகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

உலகத் தர வரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் லியோங் ஜூன் ஹோ அடுத்த ஆட்டத்தில் ஜப்பானின் Koki Watanabe  உடன் மோதுகின்றார்.

முன்னதாக, Koki Watanabe 21-8, 21-12 என்ற நிலையில் டென்மார்க்கின்  
Anders Antonsen-வைத் தோற்கடித்திருந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)