Ad Banner
 பொது

பந்திங்கில் நான்கு தொழில்சாலைகளில் தீ; மூவர் பலி

15/01/2026 07:22 PM

சிலாங்கூர், ஜனவரி 15 (பெர்னாமா) -- நேற்று புதன்கிழமை சிலாங்கூர், பந்திங், ஒலக் லெம்பிட் தொழில்துறை பகுதியில் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட நான்கு தொழில்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலியாகினர்.

இரவு மணி 11.03 அளவில் இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாகவும் 69 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார்   தெரிவித்தார்.

நான்கு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையில் பழுதுபார்க்கும் பணியின் போது அம்மூவரும் தீக்கிரையாகினர்.

அவர்களது உடல்கள் நூறு விழுக்காடு எரிந்த நிலையில் காணப்பட்டன.

நிலாய் உட்பட பேண்டிங், கேஎல்ஐஏ, டெங்கில், சைபர்ஜெயா, பாங்கி, பெட்டாலிங் ஜெயா மற்றும் புத்ராஜெயா, வளாகம் 7 ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை குழுவினர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)