Ad Banner
 

சியோல் கிராமத்தில் தீ; 47 குடும்பங்கள் வெளியேற்றம்

16/01/2026 02:29 PM

தென் கொரியா, ஜனவரி 16 (பெர்னாமா) -- தென் கொரியா தெற்கு சியோலில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் அங்கே வசித்து வந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இத்தீவிபத்தில் இதுவரை மரணச்சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை என்றாலும் சுமார் 47 குடும்பங்கள் அக்கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன.

குர்யோங் எனும் கிராமத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாக போலீஸ் கூறியது.

சுமார் 85 தீயணைப்பு வாகனங்கள் சம்ப இடத்தில் காணப்பட்டன.

தீ மிக வேகமாக பரவியதால் அப்பகுதியை மிகப் பெரிய கரும்புகை சூழ்ந்தது.

இதனால், தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் உட்படுத்தப்படவில்லை.

அருகிலுள்ள பகுதிகளுக்கு தீ பரவக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் தீ விபத்கான இரண்டாம் கட்ட எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)