Ad Banner
 உலகம்

கிரீன்லாந்தில் நேட்டோ இராணுவ வீரர்கள் குவிந்தனர்

17/01/2026 04:27 PM

கிரீன்லாந்து, 17 ஜனவரி (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், ஜெர்மனி உட்பட நேட்டோ அமைப்பு நாடுகளின் இராணுவ வீரர்கள் கிரீன்லாந்தை வந்தடைந்துள்ளனர்.

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் டோனல்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருவதால், டென்மார்க்கின் வேண்டுகோளின் பேரில் ஐரோப்பிய நாடுகள் தங்களின் இராணுவ வீரர்களை அனுப்பி வருகின்றன.

ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக உள்ள கிரீன்லாந்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற தீவாகும்.

ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிகத்தை ஆர்டிக் பகுதியில் தடுக்க, கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)