Ad Banner
 உலகம்

கராச்சியில் தீ; மூவர் பலி

18/01/2026 04:52 PM

கராச்சி, 18 ஜனவரி (பெர்னாமா) -- பாக்கிஸ்தான், கராச்சி-இல் உள்ள அடுக்குமாடி வணிக வளாகத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது மூவர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மா ஜின்னா சாலையில் உள்ள குல் ப்ளா எனும் கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ, மேல்நோக்கி மிக விரைவாக பரவி அக்கட்டிடத்தின் பெரும்பகுதியை சூழ்ந்ததாக அவசர சேவை மையம் கூறியது.

இரவு மணி 10:30-க்கு சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புப் படையினர், தீ பல தளங்களில் பரவியதைக் கண்டறிந்ததாக அதன் செய்தித் தொடர்பாளர் ஹஸ்ஸானுல் ஹசீப் கான் கூறினார்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் துணை வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததை அடுத்து, இன்று அதிகாலை தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் இரவு முழுவதும் வெளியேற்றிய வேளையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)