லண்டன், 18 ஜனவரி (பெர்னாமா) -- இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்ப்ந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய நிர்வாகியாக பணியைத் தொடங்கி இருக்கும் மைக்கல் கேரிக் சொந்த அரங்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல்களில் வெற்றிப் பெற்றது.
அதன் இரு கோல்களையும் பிரையன் மியூபோ மற்றும் பெட்ரிக் டோகு போட்டனர்.
அவ்விரு அணிகளுக்கு இடையிலான 198-வது மோதலில் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட், இரண்டாம் இடத்தில் உள்ள சிட்டியை வீழ்த்தியது.
அதேபோல செல்சி 2-0 என்ற கோல்களில் பிரெஃபெர்ட் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் செல்சி லீக் பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது.
இதனிடையே லிவர்பூல் 1-1 என்று பேர்ன்லி உடன் சமநிலை முடிவை அடைந்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)