கோலாலம்பூர், ஜனவரி 19 (பெர்னாமா) -- 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது தவணைக்கான முதல் கூட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நாடாளுமன்ற சதுக்கத்திற்கு வந்த சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
சுங்காய் பிசி முகாமின் அரச மலாய் படைப்பிரிவின் முதலாவது பாதாலியோன்-னின் முதன்மை மரியாதைப் படை நாடாளுமன்ற சதுக்கத்தை வந்தடைந்த சுல்தான் இப்ராஹிமிற்கு அரச மரியாதையைச் செலுத்தியது.
அதன் பின்னர் அரச மலாய் படைப்பிரிவின் மத்திய இசைக்குழுவினரால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரச பீரங்கி படைப்பிரிவின் பீரங்கியும் முழங்கியது.
பிரதமர் மற்றும் துணைப் பிரதமர்கள் உடன் வர மாட்சிமை தங்கிய மாமன்னர் மக்களவைக்குள் சென்றார்.
இத்தவணைக்கான முதல் கூட்டத் தொடர் 20 நாள்களுக்கு நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)