கெலாங் பாத்தா, 19 ஜனவரி (பெர்னாமா) -- 2025/2026 மலேசிய கிண்ண காற்பந்து போட்டியில் ஜோகூரின் ஜேடிதி 10-1 என்ற கோல் கணக்கில் பி.டி.ஆர்.எம் எஃப்.சி-யை அதிரடியாக வீழ்த்தியுள்ளது.
அவ்வணியின் இளம் ஆட்டக்காரரன தெதோ மார்டின் அதில் 6 கோலைகளை அடித்து இரட்டை ஹட்ரிக் சாதனையோடு அரங்கின் கவனம் ஈர்த்தார்.
சொந்த இடமான சுல்தான் இப்ராஹிம் அரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றதால் ஜேடிதி அதன் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இரண்டாவது நிமிடத்தில் கோல் வேட்டையைத் தொடங்கி 7-வது நிமிடத்தில் அடுத்த கோலை ஆல்பர்டோ மார்ட்டின் டயஸ் போட்டது.
மூன்றாம் நான்காவது கோல்கள் இரண்டாம் பாதியின் 48 மற்றும் 50-வது நிமிடங்களில் அடிக்கப்பட்டன.
அதன் கோல் போடும் முயற்சிகள் வரிசையாக வெற்றி பெற்றதால் ஜேடிதி 10 கோல்களுடன் அரங்கை அதிரச் செய்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு மீண்டும் வரும் சனிக்கிழமை அதே அரங்கில் நடைபெறும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)