Ad Banner
 பொது

தைப்பூசத்தின் போது போக்குவரத்து நெரிசலை குறைக்க இலவச பேருந்து சேவைகள்

20/01/2026 05:29 PM

கோலாலம்பூர், 20 ஜனவரி (பெர்னாமா) -- தைப்பூசத்தை முன்னிட்டு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கோலாலம்பூர் மற்றும் பினாங்கு ஆகிய இரு இடங்களில் ரெப்பிட் கே.எல் மற்றும் ரெப்பிட் பினாங்கு இலவச பேருந்து சேவைகளை, ப்ராசரானா மலேசியா பெர்ஹாட் நிறுவனம் வழங்கவுள்ளது.

கோலாலம்பூரில் பண்டார் பசார் செனி, கோம்பாக் எல்.ஆர்.டி நிலையம் மற்றும் கம்போங் பாது எம்.ஆர்.டி நிலையம் முதல் பத்துமலை வரை மூன்று முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கி ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 30 பேருந்து சேவைகள் தயார் செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இம்மாதம் 31 தேதி, காலை 6 தொடங்கி பின்னிரவு மணி 12.30 வரையிலும், பிப்ரவரி முதலாம் தேதி 24 மணி நேரம் இச்சேவை தொடரும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

"இதற்கிடையில், பினாங்கில் ரெபிட் பினாங்கு ஜெதியில் இருந்து இலவச பேருந்து சேவையை வழங்கும். ஃபெரியின் பயண அட்டவணையைப் பெருத்து ஒவ்வொரு 20 முதல் 60 நிமிடங்களுக்கும் 12 பேருந்து சேவைகள் செயல்படுத்தப்படும். கூடுதலாக, பினாங்கு துறைமுக ஆணையமும், பினாங்கு துறைமுக நிறுவனமும் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை 53 மணிநேர இலவச ஃபெரி சேவையை வழங்கும். பிப்ரவரி 2-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை அதன் சேவை தொடரும்'' என அந்தோணி லோக் கூறினார்.

இதனிடையே, அருகிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் திருவிழா கொண்டாட்டங்கள் இந்துக்கள் கலந்து கொள்வதை எளிமையாக்கும் வகையில், ஜோகூர் பாரு, சிரம்பான், ஈப்போ, கோத்தா செதார் மற்றும் சுங்கை பட்டாணி ஆகிய ஐந்து இடங்களில் பஸ்.மை பயன்பாட்டிற்கான கூடுதல் சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)