குவாட்டமாலா, ஜனவரி 21 (பெர்னாமா) -- குவாட்டமாலாவில் ஒரு கும்பலின் தாக்குதலினால் ஒன்பது போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு நெருக்கடியைக் கையாள, அந்நாட்டு அரசாங்கம் 30 நாள்கள் முற்றுகை நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில், அமைதியைக் கொண்டுவர, ஊரடங்கு உத்தரவு அல்லது விரிவான சட்ட சீர்திருத்தம் போன்ற கூடுதல் நடவடிக்கைகளை அங்குள்ள எதிர்பார்க்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை, பாரியோ 18 கும்பலைச் சேர்ந்த கைதிகள், அதிக சலுகைகளைக் கோரி மூன்று சிறைகளில் 46 காவலர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தபோது மோதல் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் அந்தக் கும்பலின் தலைவனை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலையை மீண்டும் கைப்பற்றிய பின்னர் வன்முறை தீவிரமடைந்தது.
தற்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் முற்றுகை நிலை பாதுகாப்புப் படைகளின் அதிகாரத்தை விரிவுபடுத்துவதோடு, சில பொது சுதந்திரங்களை தற்காலிகமாக குறைக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)