கோலாலம்பூர், ஜனவரி 21 (பெர்னாமா) -- வெளித்தரப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் சுயமான மற்றும் மீள்தன்மை கொண்ட உள்நாட்டு தற்காப்பு தொழில்துறையை மேம்படுத்தும் நீண்ட காலத் திட்டமாக தேசிய தற்காப்பு தொழில்துறை கொள்கை டி.ஐ.பி.என்-யை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
அதிகரித்து வரும் சிக்கலான மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய பாதுகாப்பு நிலப்பரப்பை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் தற்காப்பு திறன்களை வலுப்படுத்த அந்நடவடிக்கை முக்கியமானது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்
''இந்த நடைமுறை நிலையில், நாட்டின் பாதுகாப்பும் தற்காப்புத் திறனும் உறுதி செய்யப்படுவதற்காக வெளிநாட்டுத் தரப்பின் மீது முழுமையாக தொடர்ந்து சார்ந்திருக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தற்காப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்படும் பெரும் நிதி, தன்னிறைவு பெற்ற, நிலைத்த மற்றும் மீள் திறன் கொண்ட தேசிய தற்காப்புத் தொழில்துறையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படாவிட்டால் அது மிகப் பெரிய இழப்பாகும். ஆகவே, இத்தகைய விழிப்புணர்வின் அடிப்படையில், தேசிய தற்காப்புத் தொழில்துறை கொள்கை (DIPN) வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின்
இன்று, கோலாலம்பூரில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த டி.ஐ.பி.என்-னின் அறிமுக விழாவில் உரையாற்றிய முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.
அரசாங்க உறுதிப்பாட்டை உள்ளடக்கிய ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் தற்காப்பு கொள்முதல் கொள்கைகளில் சீர்திருத்தம் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தே டி.ஐ.பி.என்-னின் வெற்றி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)