Ad Banner
 பொது

COC உரிமை மோதல்களைத் தீர்க்கும் கருவி அல்ல: வெளியுறவு அமைச்சர்

22/01/2026 05:13 PM

கோலாலம்பூர், ஜனவரி 22 (பெர்னாமா) -- தென் சீனக் கடல் நன்னடத்தை கோட்பாடு சி.ஓ.சி.-ஐ உருவாக்குவது என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வட்டார உரிமை மோதல்களைத் தீர்க்கும் ஒரு கருவி அல்ல.

சம்பந்தப்பட்ட நீர்பகுதிகள் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான வர்த்தக பாதையாக இருப்பதை உறுதி செய்வதே இந்த கட்டமைப்பின் நோக்கம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் 
தெரிவித்திருக்கின்றார்.

''இந்தப் பகுதியின் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிரச்சனை இருதரப்பு அல்லது பலதரப்பு ரீதியாக தீர்க்கப்படுகிறது. ஆனால் சி.ஒ.சி என்பது தென் சீனக் கடல் ஒரு சுதந்திரமான கடலாகவும், அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய கடலாகவும், வணிகக் கடலாகவும், அனைத்து தரப்பினரும் எப்போதும் பயன்படுத்த பாதுகாப்பான கடலாகவும் இருக்க வேண்டிய ஒரு கட்டமைப்பாகும்.'' என்றார் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் 

தென் சீனக் கடல் சி.ஓ.சி. பேச்சுவார்த்தைகளில் மலேசியாவின் பங்கு மற்றும் பாது புதே அப்பால் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பு நிலைமை உள்ளிட்ட அண்மைய முன்னேற்றங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விகளுக்கு டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான்  அவ்வாறு பதிலளித்தார்.

பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான நடத்தைக் கொள்கைகளையும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளையும் அமைப்பதே சி.ஓ.சி.-யின் பங்கு என்றும் அவர் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)