Ad Banner
 பொது

UPUONLINE: விண்ணப்பங்கள் ஜனவரி 29 முதல் திறக்கப்படும்

22/01/2026 06:39 PM

கோலாலம்பூர், 22 ஜனவரி (பெர்னாமா) -- 2026/2027 கல்வி தவணையில், சான்றிதழ், அடிப்படைக் கல்வி, டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் நுழைவிற்கான UPUOnline விண்ணப்பங்கள், முதல் கட்டமாக ஜனவரி 29 முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை திறக்கப்படும்.

இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள், இவ்வாண்டு ஏப்ரல் 13 முதல் மே 15-ஆம் தேதி வரை திறக்கப்படும்.

20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 36 பாலிடெக்னிக்குகள், 106 சமூகக் கல்லூரிகள் மற்றும் இரண்டு மாரா உயர்கல்விப் பிரிவு, MARA BPT கழகங்களில் நுழைவதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதல் கட்டத்தில், அனைத்து கல்வி திட்டங்களுக்கும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் அல்லது அதற்கு சமமான கல்வியை முடித்தவர்களுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்படும்.

இரண்டாம் கட்டம், நேர்காணல்கள் மற்றும் தேர்வுகள் இல்லாத திட்டங்களை மட்டுமே உள்ளடக்கியது என்று உயர்கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

UPUOnline பதிவு எண்ணை, பேங்க் சிம்பானான் நேஷனலின் 387 கிளைகளில் உள்ள முகப்புகளில், அதன் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம், ஏ.டி.எம் மற்றும் இணையம் வழியாக myBSN ஆகியவற்றில் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, 10 ரிங்கிட் 60 சென் கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)