நெகிரி செம்பிலான், 26 ஜனவரி (பெர்னாமா) -- 2025/2026 மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு நெகரி செபிலான் ஃப்.சி முன்னேறியுள்ளது.
நேற்றிரவு, பாரோய் அரங்கில் நடைபெற்ற மிகச் சிறந்த 16 அணிகள் சந்திக்கும் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 1-0 என்ற நிலையில் இமிக்ரேஷன் ஃப்.சி-யை தோற்கடித்ததன் வழி நெகரி செபிலான் ஃப்.சி காலிறுதியில் கால் வைத்தது.
இதற்கு முன்னதாக, பினாங்கு பத்து காவான் அரங்கில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அவ்விரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை முடிவை எதிர்கொண்டிருந்தன.
அதே நிலை இந்த இரண்டாம் சுற்று ஆட்டத்திலும் தொடராமல் இருக்க நெகரி செபிலான் ஃப்.சி சொந்த அரங்கில் முடிந்தவரை போராடியது.
மத்திய திடல் ஆட்டக்காரர் அ. செல்வன் தட்டிக்கொடுத்த பந்தை லுக்மான் ஹகீம் ஷாம்சுட்டின் லாவகாமாக கோலாக்கியதன் வழி அவ்வணி வெற்றிப் பெற்றது.
நெகரி செபிலான் ஃப்.சி காலிறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் ஃப்.சி உடன் மோதுகின்றது.
இதனிடையே, கோலாலம்பூர் அரங்கில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பேராக்
ஃப்.சி -யை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து KL City ஃப்.சி-யும் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வானது.
அந்த காலிறுதி ஆட்டத்தில் அது திரங்கானு ஃப்.சிC-யைச் சந்திக்கவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)