மணிலா, ஜனவரி 26 (பெர்னாமா) -- பிலிப்பைன்சில் 300க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் இதுவரை 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இவ்விபத்தில் மேலும் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள பசீலன் எனும் மாகாணத்தில் இன்று அதிகாலை இவ்விபத்து நிகழ்ந்தது.
இதுவரை 215 பேர் உயிரிருடன் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிலிப்பைன்சில் பழைய கப்பல்கள், போதிய பராமரிப்பின்மை மற்றும் பாதுகாப்பு விதிகளைச் சரியாகப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது இயல்பாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)