புது டெல்லி, ஜனவரி 28 (பெர்னாமா) -- ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இவ்வாறு நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் 2032ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு ஐரோப்பிய நிறுவனங்களுக்கான வரிகளில் 400 கோடி யூரோவைச் சேமிக்க வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் சில இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதித்தது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு அதன் நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் அவரின் முயற்சிக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.
ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் சட்டப்பூர்வ சரிபார்ப்புக்குப் பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் முறையாகக் கையெழுத்தாகும் என்று இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)