Ad Banner
 பொது

ஊழலை எதிர்ப்பதா அல்லது பணிமாற்றமா, அமலாக்க அதிகாரிகளுக்கு ஒரு வாரம் அவகாசம்

28/01/2026 07:01 PM

புத்ராஜெயா, ஜனவரி 28 (பெர்னாமா) -- ஊழலை எதிர்த்துப் போராடுவதில் அதிகப் பொறுப்பை ஏற்கத் தயாரா அல்லது பணிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கிறீர்களா என்பதைத் தீர்மானிக்க அமலாக்க அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.

கடத்தல், ஊழல், குண்டர் கும்பல் போன்ற தவறான நடத்தைகள் மீது சமரசம் கொள்ளும் அமலாக்க அதிகாரிகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''உங்களிடம் ஏதாவது ஒப்படைக்கப்பட்டு மிகப்பெரிய சவால்கள் மற்றும் கடுமையான சோதனைகள் காரணமாக அதைச் செயல்படுத்த முடியவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அழைப்பின் ஆர்வம் அல்லது ஈர்ப்பு எப்போதும் கவரக்கூடியதாக இருந்தால் இந்த வாரத்திற்குள் தலைவர்களிடமோ அல்லது எனக்கோ அமைச்சரிடமோ அல்லது சட்டத்துறை தலைவரிடமோ அல்லது யாரிடமோ தெரிவிக்க பரிந்துரைக்கிறேன். நீங்கள் ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை என்று அவர்களிடம் சொல்லுங்கள். எனவே, மற்றவர்களுக்கு வழிவிடுங்கள். ஒரு வாரம்'', என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சில் நிதிக் குற்றங்கள் தொடர்பான துறைகள் அல்லது அமலாக்க நிறுவனங்களின் தலைவர்களுடனான பிரதமரின் புத்தாண்டு உரையின்போது அன்வார் அதனைக் கூறினார்.

மலேசியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளதால் நாட்டின் நிர்வாக அமைப்பில் மக்கள் பாதுகாப்பையும் சீர்திருத்தத்தையும் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)