Ad Banner
Ad Banner
 உலகம்

தங்க விலை உயர்ந்தாலும், மக்களின் ஆர்வம் குறையவில்லை

30/01/2026 05:24 PM

புது டெல்லி, ஜனவரி 30 (பெர்னாமா) -- தங்க விலை தொடர்ந்து உயர்ந்தாலும், இந்தியாவில் நகைகளை வாங்குவதற்கான ஆர்வம் குறைய வில்லை.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை மீறி நகைக் கடைகளுக்கு படையெடுத்து வருவது, தங்கத்தின் மீதான அந்நாட்டு மக்களின் நீடித்த ஆர்வத்தைக் காட்டுகிறது.

இந்தியா முழுவதும் திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் போன்றவற்றுக்காகவும், விலைமதிப்பற்ற தங்கத்தின் மீதான பாரம்பரிய ஆர்வத்தினாலும் மக்கள் தங்கத்தை தொடர்ந்து வாங்குகிறார்கள்.

மேலும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாகவும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் சொத்தாகவும் தங்கத்தை அவர்கள் கருதுகிறார்கள்.

இந்திய தலைநகரில் உள்ள மிகவும் பிரபலமான நகைச் சந்தைகளில் , வாடிக்கையாளர்கள் தங்க காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வியாழக்கிழமை தங்கத்தின் விலை, கிராமுக்கு 1,190 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)