ஜோகூர் பாரு, ஜனவரி 31 (பெர்னாமா) -- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் 150க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 3,164 ஆகும்
இவற்றில், தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.
மாணவர் எண்ணிக்கை சரி தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காண கல்வி அமைச்சு பல அணுகுமுறைகளை எடுத்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளை இடமாற்றம் செய்வதும் அதில் அடங்கும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இருப்பினும் சூழ்நிலையைப் பொறுத்து அந்த அணுகுமுறை செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
''மாணவர்களின் எண்ணிக்கை 50 அல்லது 30க்கும் குறைவாகவோ இருந்தாலும் சம்பந்தப்பட்ட பகுதியில் கல்விக்கான வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்விக்கான அணுகல் அனைத்து இடங்களுக்கும் சென்றடைவதை கல்வி அமைச்சு உறுதி செய்யும்'' என்றார் வோங் கா வோ.
இன்று ஜோகூர் சிகாமாட்டில் Central Site சீனப் பள்ளியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை புரிந்த வோங் செய்தியாளர்களிடம் அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)