ஆஸ்திரேலியா, ஜனவரி 31 (பெர்னாமா) -- கணித்ததைப் போலவே ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான கார்லோஸ் அல்கராஸ் தேர்வாகினார்.
காலில் ஏற்பட்ட காயத்தினால் சற்று பலவீனமடைந்திருந்தாலும் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்திய கார்லோஸ் அல்கராஸ் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்-வுடன் கார்லோஸ் அல்கராஸ் விளையாடினார்.
முதல் இரு செட்களை 6-4 7-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றிய கார்லோஸ் அல்கராஸ் அடுத்த இரு செட்களில் 6-7, 6-7 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
மூன்றாம் செட்டில் வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக 22 வயதான கார்லோஸ் அல்கராஸ் சற்று வலுவிழந்தார்.
இருப்பினும் ஐந்தாம் செட்டில் 7-5 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலியா பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
இதனிடையே மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச்-உம் ஜானிக் சின்னர்-உம் விளையாடினர்.
முதல் செட்டில் 3-6 என்று தோல்வி கண்ட நோவக் ஜோகோவிச் இரண்டாம் செட்டில் 6-3 என்று வெற்றி பெற்றார்.
மூன்றாம் செட்டில் 4-6 என்று சின்னர் வெற்றி பெற்றாலும் நான்காம் ஐந்தாம் செட்களை 6-4, 6-4 என்ற புள்ளிகளில் ஜோகோவிச் கைப்பற்றினார்.
இதன் வழி தமது 25-ஆம் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இறுதி ஆட்டத்திற்கு ஜோகோவிச் முன்னேறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)