ஈப்போ, ஜனவரி 31 (பெர்னாமா) -- பேராக், ஈப்போ தைப்பூச விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை மணி நான்கு அளவில் புந்தோங் சுங்கை பாரியில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நித்திய பூஜைக்குப் பின்னர்....
ஆயிரக் கணக்கான பக்தர்களுடன் புறப்பட்ட இரதம் காலை மணி 11.15-க்கு கல்லுமலையை சென்று சேர்ந்தது.
இவ்வாண்டு நீண்ட விடுமுறைக் காலத்தில் தைப்பூசம் கொண்டாடப்படுவதால், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கல்லுமலை ஆலயத்திற்கு வருகை புரிந்துள்ளதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் செயலாளர் வெ.மு. தியாகராஜன் தெரிவித்தார்.
போலீஸ், இராணுவம், கலகத் தடுப்புப் படையினர் உள்ளிட்ட அமலாக்கத் தரப்பினரால் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பக்தர்களின் களைப் போக்குவதற்கான கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு ஏராளமான தண்ணீர் பந்தல்களும் அன்னதான பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வேண்டுல்தலை நிறைவேற்றுவதற்காக நூற்றுக் கணக்கானோர் பால் குடம் ஏந்தி இரத்துடன் நடந்து வந்தனர்.
குகை ஆலயத்தை வந்தடைந்த முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாரப்பூர்வமாக தைப்பூச விழா தொடங்கியது.
இரதம் பவனி வந்த வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்து தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)