கொழும்பு, பிப்ரவரி 1 (பெர்னாமா) -- மற்றொரு நிலவரத்தில், இலங்கையின் தலைநகரான கொழும்பு வீதிகளில், நேற்று நடைபெற்ற வருடாந்திர பௌத்த அணிவகுப்பை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து நின்றனர்.
தீவு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம் இசைக்கருவி வாசிப்பவர்களுடன சேர்ந்து, வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட டஜன் கணக்கிலான யானைகளும் தெருக்களில் அணிவகுத்துச் சென்றன.
இன்று இரவு வரைத் தொடரும் இந்த இரண்டு நாள் வைபத்தினால் மிகப் பெரிய கலாச்சாரக் காட்சி மையமாக கொழும்பு மாறியிருக்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)