Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் ஆதரவு

24/03/2026 04:22 PM

லண்டன், 24 மார்ச் (பெர்னாமா) -- பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தும் நடவடிக்கையை உலகத் தலைவர்கள் வரவேற்றனர். 

இது பதற்றங்களைத் தணிப்பதற்கான ஒரு சிறு நம்பிக்கையை அளித்துள்ளது.

மேலும், வாஷிங்டன் - தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தையை வரவேற்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மத்திய கிழக்கு மோதலுக்கு அவசரத் தீர்வு காண்பதே முக்கிய முன்னுரிமை என்றும் கூறினார்.

தற்போது, முக்கிய முன்னுரிமை மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதும், பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கப்படும் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதுமாகும். 

குறிப்பாக அணு ஆயுதங்கள் தொடர்பாக, ஈரானுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

இதனிடையே, ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ஐந்து நாள்களுக்கு நிறுத்துவதற்கான டோனல் ட்ரம்பின் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றதோடு, அதனை "ஒரு நிதானத்தின் வெளிப்பாடு" என்றும் குறிப்பிட்டது.

மேலும்,  மத்திய கிழக்கில் பதற்றங்களைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தாங்கள் ஆதரிப்பதாக அவ்வமைப்பின் பேச்சாளர் அன்வர் எல் நான் கூறினார்.

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்பின் முடிவுக்கு ஜெர்மனி சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

அது, அரச தந்திரத்தை நோக்கிய ஒரு நேர்மறையான முடிவு என்றும் அவர் விவரித்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]