சுபுட் மாகாணம், பிப்ரவரி 03 (பெர்னாமா) -- அர்ஜெண்டினாவின் சுபுட் மாகாணத்தில் 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவிவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இடைவிடாமல் போராடி வருகின்றனர்.
தங்களின் போராட்டத்தைத் தணிக்க மழை மற்றும் குளிர்ந்த வெப்பநிலையை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வார இறுதியில் பலத்த காற்றினால் பரவிய இத்தீயினால் இரண்டு மாகாணங்களை இணைக்கும் சாலைகளைத் தற்காலிகமாக மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புக்காகத் தீயை அணைப்பதில் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மிகவும் மோசமான காட்டுப்பகுதியாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் தீயை அணைக்க முயற்சிக்கும்போது தீயணைப்பு வீரர்களின் வேலை மேலும் கடினமாகுகிறது.
படகோனியா காட்டுத் தீ புவெனஸ் ஐரிசை விட இரண்டு மடங்கு பெரிய பகுதியை அழித்துவிட்ட வேளையில் அதிபர் ஜேவியர் மிலேயின் சிக்கன நடவடிக்கைகள் உதவி வளங்களைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)