புத்ராஜெயா, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம்மின் ஊழல் வழக்கு விசாரணைகள் மூலம் கோலாலம்பூர் மாநராண்மைக் கழகம் டி.பி.கே.எல் உட்பட அரசாங்கத் துறை அல்லது நிறுவனங்களில் நிர்வாக பலவீனம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி விவரித்தார்.
எஸ்.பி.ஆர்.எம்மின் நடவடிக்கைகள் எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்ஷன் 7இன் விதிகளுக்கு உட்பட்டவை என்றும் அவை காரணமின்றி மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
"எங்களின் சட்டம் செக்ஷன் 7இன் கீழ் நிர்வாகத்தைப் பார்ப்பது குறித்து அது இரண்டு விஷயங்களால் வழிநடத்தப்படுகிறது. ஒன்று, தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது, எங்களின் விசாரணையின் அடிப்படையில். எங்களின் அந்த விசாரணையிலிருந்தே நாங்கள் பல முன்னேற்றங்களைக் காண்போம். எனவே, எங்களின் விசாரணையின் பலனாகவே, எங்களின் ஈடுபாடு. கே.எல்லில் இந்த விஷயத்தில் பார்த்தால் பலவீனங்களை மேம்படுத்துதல், அமைப்புகள் மற்றும் நடைமுறைகளைச் சரிசெய்தல் போன்றவற்றில் இரு தரப்பினரின் உடன்பாட்டையும் இங்கே பெற வேண்டும்", என்றார் டான் ஶ்ரீ அசாம் பாக்கி.
நிர்வாக பலவீனங்களை மேம்படுத்தும் செயல்முறைக்கு எஸ்.பி.ஆர்.எம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் புரிதல் தேவை என்று டான் ஶ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
அமைப்பு மற்றும் நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களை மதிப்பிடுவதற்கான கடப்பாடு துறைத் தலைவர்களிடம் உள்ளது என்றும் அவர்கள் இந்த அம்சத்தை ஆராய்ந்து மேல் நடவடிக்கைக்காக எஸ்.பி.ஆர்.எம்மிற்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)