Ad Banner
 உலகம்

ஈரான் தலைவர்களுடன்  டிரம்ப்  பேச்சு வார்த்தை

03/02/2026 07:42 PM

வாஷிங்டன், டி.சி, பிப்ரவரி 03 (பெர்னாமா) -- ஈரானுடன் நிலவிவரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

''அது பற்றித்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். தற்போது பெரிய கப்பல்கள்-மிகப் பெரியதும் சிறந்ததுமானவை ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அது எவ்வாறு முடிவடையும் என்பதைப் பார்ப்போம்'', என்றார் டோனல்ட் டிரம்ப்.

அரசுக்கு எதிரான போராட்டங்களை அமெரிக்கா தூண்டி விடுவதாக ஈரான் சாடியிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்கலாம் என்று ஈரான் கூறுகிறது.

இருப்பினும், ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை மேற்கொண்டால் அதனை எதிர்கொள்ள தமது தரப்பு தயாராக இருப்பதாக ஈரான் உயர் தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமேனி தெரிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)