பேங்காக், பிப்ரவரி 06 (பெர்னாமா) -- தாய்லாந்தின் புதிய அரசாங்கத்தைத் தீர்மானிக்க, அந்நாட்டு மக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கவுள்ளனர்.
இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தலில், மூன்று கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
முன்னாள் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் அவரின் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தலைமையிலான பூம்ஜைதாய் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பியூ தாய் கட்சியும் இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றன.
ஏழு கோடியே 10 லட்சம் மக்களைக் கொண்ட அந்நாட்டில் சுமார்ஐந்து கோடியே 30 லட்சம் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)