Ad Banner
 உலகம்

பாகிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதல்; 31 பேர் பலி

07/02/2026 01:28 PM

இஸ்லாமாபாத், 07 பிப்ரவரி (பெர்னாமா) --  பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 31 பேர் கொள்ளப்பட்டனர்.

இத்தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் கூறியது.

இச்சம்பவத்தில் 170 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்று போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)