ஈப்போ, பிப்ரவரி 14 (பெர்னாமா) -- இன்று அறிமுகம் கண்ட DKKN எனப்படும் தேசிய குடும்ப அன்புக் கொள்கையுடன் இணங்க, மலேசியா வளர்ச்சி அடைவதற்கான அடித்தளமாக குடும்பக் கல்வியை அனைத்து தரப்பினரும் வலுப்படுத்த வேண்டும்.
மதிப்புகள், ஒழுக்கங்கள் மற்றும் சமூக ஒற்றுமையை உருவாக்குவதில் முக்கிய அடித்தளமாக இருக்கும் குடும்ப நிறுவனத்தின் பங்கை, தற்போது அடையப்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் புறக்கணிக்கக்கூடாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம், இலக்கவியல் மாற்றம், எரிசக்தி மாற்றம் பற்றி நாம் விவாதிப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஆனால் அடித்தளம் இன்னும் குடும்பம்தான். அதனால்தான் ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு நான் ஆதரவளித்து அனைத்து ஊக்கத்தையும் அளிக்கிறேன். மேலும் இந்த குடும்ப அன்புக் கொள்கை நமக்கு ஒரு நினைவூட்டலாகும்,'' என்றார் அவர்.
ஆகவே, வானொலியின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் அறிவிப்பாளர்கள் அல்லது அதன் பணியாளர்கள் அர்ப்பணிப்பை நேயர்கள் அனைவரும் உணர்ந்து பாராட்டவே ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
சனிக்கிழமை, பேராக் உலு கிந்தாவில் நடைபெற்ற தேசிய குடும்ப அன்புக் கொள்கையின் அறிமுக விழாவில் அன்வார் உரையாற்றினார்.
நாடு, தொடர்ந்து பொருளாதார மேம்பாட்டை பதிவு செய்வதை உறுதி செய்வதற்கு, அமைதியும் தூய்மையான நிர்வாகமும் முக்கியமான நிபந்தனைகள் என்று அவர் விளக்கினார்.
மக்களின் சொத்துக்களைத் திருடும் நடவடிக்கைகளையும், ஊழலையும் முற்றிலுமாக துடைத்தொழித்தால், நாடு உயர்ந்து அதன் சிறந்த திறனை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)