Ad Banner
 உலகம்

அன்பர்கள் தினத்தில் 2,000 ஜோடிகள் திருமணம்

15/02/2026 05:02 PM

மெக்சிக்கோ, 15 பிப்ரவரி (பெர்னாமா) -- மெக்சிகோ சிட்டியில் அன்பர்கள் தினத்தை முன்னிட்டு ஈராயிரத்திற்கும் மேற்பட்ட ஜோடிகள் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டன.

நீதிபதி மற்றும் மெக்சிகோ சிட்டி ஆளுநர் கிளாரா புருகடா ஏற்று நடத்திய இத்திருமண விழாவில், கேக் வெட்டி, சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்ட புதுமணத் தம்பதிகளுக்கு திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

அனைத்து வயதிலான தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட இவ்விழாவில் சிலர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தனர்.   

மெக்சிகோவில் இது போன்ற கூட்டு திருமண விழாக்கள் அன்பர்கள் தினத்துக்காக ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]