Ad Banner
Ad Banner
 உலகம்

ஹாக்கி ஆட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு; மூவர் பலி

17/02/2026 07:58 PM

பொவ்டக்கெட், 17 பிப்ரவரி (பெர்னாமா) -- அமெரிக்கா, பொவ்டக்கெட் தீவில் உள்ள டெனிஸ் எம். லின்ச் ஹாக்கி அரங்கில் நடைபெற்ற இளைஞர் ஹாக்கி விளையாட்டின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

அதோடு, மேலும் மூவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குடும்ப தகராற்றினால் ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொவ்டக்கெட் போலீஸ் தலைவர் தினா கொன்கால்வ்ஸ் கூறினார். 

''சந்தேக நபர் அந்த உயிரிழந்தவர்களில் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் இன்னும் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர்,'' என்றார் அவர். 

இச்சம்பவத்திற்குப் பின்னர், குடும்ப உறுப்பினர்களும் சீருடையில் இருந்த இடைநிலைப்பள்ளி ஹாக்கி வீரர்களும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி அப்பகுதியை விட்டு வெளியேற பேருந்தில் ஏறுவதைக் காண முடிந்தது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]