ஷங்காய், 17 பிப்ரவரி (பெர்னாமா) -- 2026 சீனப்புத்தாண்டின் முதல் நாளில், 12:01 மணிக்குப் பிறந்த முதல் குழந்தையின் பிறப்பை, சீனா, ஷங்காயில் உள்ள தொங்ரென் மருத்துவமனை கொண்டாடியது.
பண்டிகை நாளில் வேலை செய்ய வேண்டியிருந்தாலும், மருத்துவ ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் கவனத்தையும் இந்தக் குழந்தையின் பிறப்பு பிரதிபலிக்கிறது.
அந்த அழகான மற்றும் ஆரோக்கியமான குழந்தை, 3.290 கிலோகிராம் எடையுடன் பிறந்திருக்கின்றது.
பிரசவத்தின் போது தமது மனைவி மற்றும் குழந்தையின் பக்கத்திலேயே இருந்த தந்தை ஹன் ஃபெய், மறக்க முடியாத இந்த புத்தாண்டு தருணங்களின் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தார்.
இந்தக் குழந்தை தங்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்று அதன் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]