கட்டார், பிப்ரவரி 21 (பெர்னாமா) -- கட்டார் பொது டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான கார்லஸ் அல்கராஸ், நடப்பு வெற்றியாளரான ஆன்ரே ருப்லேவைத் தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ருப்லேவை 7-6, 6-4 என்ற புள்ளிகளில் தோற்கடித்து 2026-ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்படாத ஆட்டக்காரர் என்ற தமது பதிவைத் தொடர்ந்துள்ளார்.
இந்த வெற்றியின் வழி, தாம் பங்கேற்ற 13 ஆட்டங்களில் அல்கராஸ், 12ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், அவர் இப்பருவத்தில் தொடர்ந்து 11 முறை வெற்றியையும் பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது செட்டில் 3-0 என்ற பின்னடைவில் இருந்து ருப்லேவ் மீண்டு வந்து புள்ளிகளை சமன் செய்து ஐந்து இறுதிப் புள்ளிகளைக் காப்பாற்றினாலும் அல்கராஸ் இரண்டு செட்களில் நிதானமாக தமது வெற்றியை உறுதிசெய்தார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில், செக் குடியரசின் ஜாக்குப் மென்சேக்கை 6-4, 7-6 என்ற புள்ளிகளில் தோற்கடித்த பிரான்ஸ் ஆட்டக்காரர் அர்த்தர் ஃபில்சை அல்கராஸ் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)