Ad Banner
Ad Banner
 பொது

சுங்கத்துறையின் இரு அதிரடி சோதனை நடவடிக்கைகளை;  42 சொகுசு வாகனங்கள் பறிமுதல்

23/02/2026 06:53 PM

ஜோகூர் பாரு, பிப் 23 - ஜோகூர் அரச மலேசிய சுங்கத்துறை, JKDM மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 42 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு வரி செலுத்தப்படாத மதுபானங்களை விநியோகிக்கும் ஒரு கும்பலையும் கைது செய்துள்ளது.

அப்பறிமுதலின் வரி உட்பட மொத்த மதிப்பு 3 கோடியே 69 லட்சம் ரிங்கிட் ஆகும்.

Ops Terma எனப்படும் சிறப்பு நடவடிக்கையின் வழி, உரிமம் பெற்ற கிடங்குகள் மற்றும் நில ரோந்துகளை உள்ளடக்கி, 341 சோதனைகளை JKDM-மின் அமலாக்கப் பிரிவு மேற்கொண்டதாக, ஜோகூர் மாநில சுங்க இயக்குநர் அமினுல் இஸ்மீர் முஹமட் சுஹாய்மி தெரிவித்தார்.

Ops Terma-வின் கீழ் திறக்கப்பட்ட 21 வழக்குகளில், 70 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வணிக முத்திரையிலான 42 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் வரி மதிப்பு ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் ஆகும் என்று அவர் கூறினார்.

இவ்வழக்கின் மொத்த மதிப்பு மற்றும் வரித்தொகை 2 கோடியே 20 லட்சம் ரிங்கிட்டைத் தாண்டியிருக்கின்றது.

மேலும், 40 முதல் 50 வயதுக்குட்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த நிறுவன உரிமையாளர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், COBRA தலைமையகக் கிளையின் தகவலின் அடிப்படையில், ஜனவரி 20-ஆம் தேதி இரவு மணி 11 அளவில், கூலாயைச் சுற்றியுள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், வரி செலுத்தப்படாத மதுபானங்களை விநியோகிக்கும் ஒரு கும்பலை JKDM ஜோகூர் முறியடித்தது.

1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டம், செக்‌ஷன் 135(1)(d)-யின் கீழ் அவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)