Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இன ரீதியான கருத்துகளை வெளியிட்ட பிரெஸ்டியானி இடைநீக்கம்

24/02/2026 06:28 PM

பென்ஃபிகா, பிப்ரவரி 24 (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண போட்டியின் இரண்டாம் சுற்றில் ரியால் மட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதற்கு பென்ஃபிகா ஆட்டக்காரர் கியான்லூகா பிரெஸ்டியானிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Real Madrid அணியின் ஆட்டக்காரர் வினீசியஸ் ஜூனியருக்கு எதிராக இன ரீதியான கருத்துகளை வெளியிட்டதன் விளைவாக பிரெஸ்டியானி  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வரும் வியாழக்கிழமை ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான ஆட்டத்தில் பென்ஃபிகா களமிறங்குகின்றது.

இந்நிலையில், பிரெஸ்டியானி  மீது இன ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அனைத்துலக காற்பந்து சம்மேளமான UEFA இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக UEFA-வின் ஒழுங்குமுறை அமைப்பு அறிக்கை ஒன்றின் வழி அறிவித்துள்ளது.

இந்த முடிவின் காரணமாக, 20 வயதான பிரெஸ்டியானி  பென்ஃபிகா உடன் களமிறங்க முடியாமல் போனது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 10 போட்டிகளில அவருக்கு தடை விதிக்கப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)