Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக்; கூச்சிங் சிட்டி வெற்றி

02/03/2026 03:26 PM

கங்கார், மார்ச் 02 (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக்

பெர்லிஸ் கங்காரில் உள்ள துவாங்கு Syed Putra அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் Kuching City FC 1-0 என்ற கோலில் Imigresen எஃப்.சி-ஐ தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தில் கோல் போடுவதில் இரு அணிகளும் பல முயற்சிகள் மேற்கொண்டன.

அதில், Imigresen எஃப்.சி கோல் காவலர் முஹமட் ஜரீப் இர்பான் ஹாஷிமுடின் ஆட்டத்திறனால் பல கோல்கள் லாவகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் கூச்சிங் சிட்டியின் ஒரே கோலை அப்ட்சால் ஹில்மி சுக்கிப்ளி பினால்டி வாய்ப்பின் வழி போட்டார்.

இந்த வெற்றியின் வழி, கூச்சிங் சிட்டி மூன்று புள்ளிகளைப் பெற்று, பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)