காலே, மார்ச் 05 - கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற பன்னாட்டு கடற்படை நிகழ்வில் பங்கேற்ற ஈரானிய மாலுமிகள் குழு ஒன்று அமெரிக்க இராணுவத்தால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் காலி கடற்கரையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்துலக கடல் பகுதியில் புதன்கிழமை ஈரானிய கடற்படைக் கப்பலான IRIS Dena கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பல தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால், "Quiet Death" நீர்மூழ்கி ஏவுகணை மூலம் அந்த ஈரான் கடற்படை கப்பல் தாக்கப்பட்டது.
அக்கப்பலில் இருந்து வந்த அவசர சமிக்ஞையைப் பெற்ற பின்னர், மீட்புப் பணிக்காக இலங்கை விமானத்தையும் கப்பலையும் அனுப்பியது.
ஏறக்குறைய 87 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, 32 கடற்படை உறுப்பினர்கள் மீட்கப்பட்டனர்.
இதனிடையே 10-க்கும் மேற்பட்டோர் காணவில்லை.
எவ்வித மன்னிப்பும் இன்றி, அமெரிக்க போர் செயலாளர் Pete Hegseth, அச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)