இங்கிலாந்து, 06 மார்ச் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு All England பூப்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு நாட்டின் ஆடவர் இரட்டையர் ஏரன் சியா-சோ வூய் யிக் தேர்வு பெற்றனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அவர்கள் தங்களின் சகாக்களான, வான் அரிஃப் வான் ஜுனைடி- யாப் ரொய் கிங் ஜோடியுடன் மோதினர்.
இந்த ஆட்டத்தில் இரு முறை இரண்டாம் இடத்தை வென்றுள்ள ஏரன்-வூய் யிக் சற்று சிரமத்தை எதிர்நோக்கினர்.
முதல் செட்டில் 21-18 என்று வெற்றி பெற்ற அவர்களை இரண்டாம் செட்டில் 15-21 என்ற புள்ளிகளில் வான் அரிஃப் வான் ஜுனைடி- யாப் ரொய் கிங் தோற்கடித்தனர்.
இருப்பினும், மூன்றாம் செட் 21-18 என்ற புள்ளிகளில் ஏரன்-வூய் யிக் ஜோடிக்கு சாதகமானது.
காலிறுதி ஆட்டத்தில், ஏரன்-வூய் யிக் தமது சகாக்களான மன் வெய் சொங்-தீ கை வுன் ஜோடியுடன் மோதவுள்ளனர்.
இதனிடையே, மலேசியாவின் வெய் சொங்-கை வுன் ஜோடியும் காலிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியது.
தைவானின் சியு சியாங் சீ-வாங் சி-லின் ஜோடியுடன் விளையாடிய அவர்கள், 21-14, 21-18 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றனர்.
மகளிருக்கான இரட்டையர் ஆட்டத்தில் நாட்டின் பெர்லி டான்-எம்.தீனா ஜோடியும் காலிறுதிக்கு தேர்வாகியது.
தென் கொரியாவின் லீ சியொ ஜின்- லீ யொன் யூ விளையாடிய பெர்லி டான்-எம்.தீனா, 21-14, 21-14 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.
காலிறுதி ஆட்டத்தில் பெர்லி டான்-எம்.தீனா இந்தோனேசிய விளையாட்டாளர்களுடன் மோதவுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)