ஃபுளோரிடா, 08 மார்ச் (பெர்னாமா) -- மத்தியக் கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூறிய அவர், அந்நாட்டில் செயல்படும் இராணுவம் அல்லது அதிகாரத்தில் எஞ்சிய தலைமைத்துவம் இல்லாதபோது தான் அந்த போர் முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"எங்களிடம் அதிகமான பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை அதிகபட்சமான (வாய்ப்புகள் இருக்கலாம்). ஆனால் நாங்கள் தீர்வு காண விரும்பவில்லை. அவர்கள் தீர்வு காண விரும்புகிறார்கள். நாங்கள் தீர்வு காண விரும்பவில்லை", என்றார் அவர்.
மத்திய கிழக்கிற்கு விமானம் தாங்கிக் கப்பலை அனுப்ப பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த உதவி தனக்கு வேண்டாம் என்று கூறிய டிரம்ப் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரையும் கடுமையாக சாடினார்.
"நான் ஒரு பதிலை வெளியிட்டேன் (குறிப்பு: பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்களை அனுப்பும் வசதியை) நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கலாம். இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லையா? நான் ஒரு பதிலை வெளியிட்டேன். அவை எங்களுக்குத் தேவையில்லை என்று சொன்னேன். இது சரியான நேரமல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவற்றைப் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நான் வெளியிட்ட பதில், உங்களுக்கு மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்", என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, Air Force One-னில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)