Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நோன்பு பெருநாளை முன்னிட்டு அன்வாருக்கும் மலேசிய மக்களுக்கும் மோடி வாழ்த்து

19/03/2026 07:23 PM

புது டெல்லி, 19 மார்ச் (பெர்னாமா) -- நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை தொடர்புக் கொண்டு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மலேசிய மக்களுக்கும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட மோடி, மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல் குறித்தும் அன்வாரிடம் கலந்துரையாடினார்.

பேச்சுவார்த்தை மற்றும் அரச தந்திரம் மூலம் பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதற்கும் தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)