பெர்மிங்ஹம், மார்ச் 09 (பெர்னாமா) -- 2026 அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றில், ஏரன் சியா - சோ வூய் யிக் தோல்விக் கண்டதை அடுத்து, பட்டத்தை வெல்வதற்கான அவர்களின் இலக்கு ஈடேராமல் போனது.
நாட்டின் ஆடவர் இரட்டையரான அவர்கள், தென் கொரியாவின் நடப்பு வெற்றியாளர்களுடன் தோல்வி கண்டதால், மலேசியாவின் 19 ஆண்டுக்கால காணல் நீரானது.
யுடிலிடா பர்மிங்காம் அரங்கில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டில் உலகின் இரண்டாம் நிலையில் உள்ள ஏரன் சியா - சோ வூய் யிக் ஜோடி, 21-18 என்ற புள்ளிகளில் தென் கொரியாவின் கிம் வோன் ஹூ - சியோ சியூங் ஜே இணையைத் தோற்கடித்தது.
எனினும், இரண்டாம் செட்டில் 12-21 என்ற புள்ளிகளில் அந்த மலேசியா பின் தங்கியது.
வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில், இரு தரப்பும் தங்களின் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்திய நிலையில், 63-வது நிமிடத்தில் வோன் ஹூ - சியோ சியூங் வெற்றியை தன்வசமாக்கினர்.
இதன் வழி, இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பை ஏரன் சியா - சோ வூய் யிக் நழுவ விட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)