கொழும்பு, மார்ச் 09 (பெர்னாமா) -- கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், I-R-I-S Dena போர்க்கப்பலைச் சேர்ந்த 104 பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய இராணுவம் உறுதிப்படுத்தியது.
அந்த கப்பல் மார்ச் 4ஆம் தேதி இந்தியாவில் கடற்படை பயிற்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அமெரிக்க படையினரால், இலங்கைக் கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான I-R-N-A தனது அறிக்கையில் கூறியது.
அதேவேளையில், ஈரானிய கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி இருந்ததையும் வாஷிங்டன் உறுதிப்படுத்தியது.
காலி நகருக்கு தெற்கே கடற்கரையில் கப்பலில் இருந்து ஓர் அபாய சமிக்ஞை கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாக இலங்கை கூறியிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)