Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

எரிவாயு தட்டுப்பாடால் பாகிஸ்தானில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை

10/03/2026 05:19 PM

லாகூர், 10 மார்ச் (பெர்னாமா) -- எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இரு வாரங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க எரிபொருள் பயன்பாடு மற்றும் செலவினங்களைக் குறைக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தெரிவித்தார்.

ஈரான் மீதான போரினால் கடுமையாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை, அந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக அவர் விவரித்தார்.

அரசாங்கத் துறைகளில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, பல பொது சேவையை இணையம் வழி மேற்கொள்வது, செலவினங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஷெபாஸ் ஷரீஃப் குறிப்பிட்டார்.

மோதல் காரணமாக உலக எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தியது.

இந்த விலை உயர்வு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.

பாகிஸ்தான் அதிக அளவிலான எரிசக்தியை இறக்குமதி செய்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)