தெஹ்ரான், மார்ச் 11 (பெர்னாமா) -- ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டு தலைநகரில் குறைந்தது 460 பேர் பலியாகியுள்ள நிலையில் 4309 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தாக்குதலினால், சுமார் 18 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 18 அவசரகால தளங்களும் சேதமடைந்துள்ளதாக Tehran அவசரகால சுகாதார துறையின் துணைத் தலைவர் மெஹர் சோரௌஷ் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதோடு, பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர்.
இத்தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உட்பட அமெரிக்க இராணுவ தளவாடங்களை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தெஹ்ரான் தாக்குதலை நடத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)