Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டி; காலிறுதிக்கு செல்லும் அரினா சபலென்கா

11/03/2026 07:12 PM

வாஷிங்டன், மார்ச் 11 (பெர்னாமா) -- இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டி...

இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில், உலகின் முதன்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, நான்கு முறை கிரான் சிலாம் பட்டத்தை வென்ற நவோமி ஒசாகாவை 6-2, 6-4 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து தமது ஆதிக்கத்தை தொடர்ந்தார்.

முதல் செட்டில் ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அரினா சபலென்கா, 6-2 என்ற புள்ளிகளில் முன்னிலை வகித்தார்.

இரண்டாவது செட்டில் கடுமையான போட்டியைத் தொடர்ந்தது.

இருப்பினும், 6-4 என்ற புள்ளிகளில் நவோமி ஒசாகாவை தோற்கடித்த சபலென்கா, தமது வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே, காலிறுதிப் போட்டியில் விக்டோரியா எம்பாகோவைச் சந்திக்கவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)