கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- மின்னணு கழிவுகளுக்கு நாட்டில் உள்ள சட்டவிரோத மற்றும் உரிமம் பெறாத தொழிற்சாலைகளிடம் இருந்து அதிக தேவை இருப்பதே, வெளிநாடுகளில் இருந்து மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கு, மலேசியா ஒரு தளமாக உருவெடுத்துள்ளது.
மின்னணு கழிவுகளில் தங்கம், வெள்ளி, தாமிரம் உள்ளிட்ட அதிக மதிப்புள்ள உலோகங்கள் இருப்பதால் அதற்கான தேவை அதிகரித்திருப்பதாக, இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை துணை அமைச்சர் சைட் இப்ராஹிம் சைட் நோ தெரிவித்தார்.
"முதலில், 2018-ஆம் ஆண்டில் நெகிழி, காகிதம், ஜவுளி, உலோகக் கழிவுகள் மற்றும் மின் கழிவுகள் போன்ற பல்வேறு வகையான திடக்கழிவுகளுக்கான இறக்குமதி தடையை சீனா அறிவித்தப் பிறகு, தென்கிழக்கு ஆசியாவும் மலேசியாவும் தற்போது திடக்கழிவுகளை ஏற்றுமதி செய்யத் தேர்வு இடமாக மாறியிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனாவின் இந்தக் கொள்கை, வளர்ந்த நாடுகளை அவற்றின் கழிவுகளை ஏற்றுமதி செய்வதற்கான புதிய இடங்களைக் கண்டறியக் கட்டாயப்படுத்துகிறது," என்றார் அவர்.
வியாழக்கிழமை மக்களவையில் நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தின் போது, பல்வேறு அமலாக்க நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டின் துறைமுகங்களில் மின் கழிவுகளின் இறக்குமதி இன்னும் பரவலாக உள்ளது குறித்து செனட்டர் நிக் முஹ்மட் அப்டூ நிக் அப்துல் அசிஸ் எழுப்பிய கேள்விக்கு Syed Ibrahim அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)